Thursday, October 20, 2011

ஐப்பசி அமாவாசை

மேசைக்கடியில் பதுங்கும்
நாய்களும்
பூனைகளும்..

உயிர் நடுக்கத்தில்
செல்லப் பிராணிகளும்..

ஊரெங்கும் வேட்டைக்காரர்களா?
மிரண்டு போய்
பறவை இனங்கள்..

அமைதியான தூக்கம்
கலைந்து அலறும்
பிஞ்சு உள்ளங்கள்...

காற்றில் கலக்கும்
கந்தக நெடி...

போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?
எழுந்து அடங்கும் சந்தேகம்...

பலர் சந்தோஷங்களில்
தீப ஒளி என்றாலும்,
பலர் பயத்தினில்
இருண்டே தான் கிடக்கிறது
ஐப்பசி அமாவாசை...

15 comments:

ஸ்ரீராம். said...

வித்தியாசமான கோணம்.

சென்னை பித்தன் said...

சந்தோசங்களின் நடுவே சங்கடங்கள்!அருமை.

கோகுல் said...

மாற்றுக்கோணம்,பல பேர் யோசிக்காத கோணங்களை
கொடுத்திருக்கிறீர்கள்!

Anonymous said...

மாறுபட்ட சிந்தனை கவியே...

Mohamed Faaique said...

அருமையான கவிதை. நல்லதொரு கற்பனை

ராஜா MVS said...

சிந்திக்க தூண்டும் வரிகள்...

Thooral said...

//போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?//

அருமை அருமை

Thooral said...

இந்த கேள்விக்கான பதிலை
தமிழ் நாட்டில் கேட்டால் நிச்சயம் பதில் இல்லை

அம்பாளடியாள் said...

போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?
எழுந்து அடங்கும் சந்தேகம்...

உண்மையின் தரிசனம் கவிதை
வரிகளாய்த் தொடுத்தவிதம் அருமை !...
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .....

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
சப்தம் என்றாலே செல்லடி என பயந்து
வாழ்ந்தவர்கள் எப்படி வெடிச் சத்தத்தை
மகிழ்வின் குறியீடாக ரசிக்க இயலும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

நாம் தீபாவளி கொண்டாட வேண்டுமா?
பதில் இந்த கவிதை

SURYAJEEVA said...

வருகை புரிந்த அனைவருக்கும், நன்றி... கிறுக்கல்களை கவிதை என்று புகழ்ந்த என் தமிழ் ஆசான் திரு.சபரி அய்யாவை உங்கள் ஒவ்வொருவரிலும் பார்க்கிறேன்..

Aathira mullai said...

ஆம் ஐப்பசியில் அமாவாசை பலருக்கு அடி வயிற்றுப் பசியைக் கூட தீர்க்க முடியாத அமாவாசை. சிலருக்கு ஆர்ப்பாட்டமாக வந்து செல்லும் அசத்தலான பெளர்ணமி.
பிறர் வாட பலர் தாம் வாழும் நிலையை எண்ணி எழுதிய அழகான கவிதை. வாழ்த்துகள் சூர்யா.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

alagana kavi

Anonymous said...

வணக்கம்

தங்களின் மின்அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்….
கவிதை அருமையாக உள்ளது போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment